முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் 23 வருட அரசியல் சேவையை பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு நிகழ்வு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (08) முற்பகல் களுத்துறையில் இடம்பெற்றது.

ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் பயணம் தொடர்பாக எழுதப்பட்ட நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 

கப்பல் தலைவன் ஒருவரின் திறமையை அமைதியான கடலிலன்றி, பெரும் புயலின்போதே கண்டுகொள்ள முடியும். அந்த வகையில் ரோஹித அபேகுணவர்தனவும் கடந்த சில வருடங்களாக எதிர்க் கட்சியிலிருந்து தனது பணியை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சில அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தனது தலைமைத்துவ திறனை எடுத்துக்காட்டிய ஒருவர் என நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பெபிலியான சுனேத்ரா தேவி மகா பிரிவெனாவின் பிரிவெனாதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் அனுசாசன உரை நிகழ்த்தினார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் நிகழ்வில் உரையாற்றினார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.