மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை குவைத் நாட்டுக்காக விமான சேவையை நிறுத்தி வைப்பதற்கு ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் முடிவுசெய்துள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, சிரியா, லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க குவைத்தின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு பிறப்பித்த உத்தரவினைத் தொடர்ந்து ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ் இந்த முடிவினை எடுத்துள்ளது.

மத்திய கிழக்கு உட்பட உலகின் ஏனைய பகுதிகளிலும் கொரோனாவின் பரவில் வேகமாக அதிகரித்து வருகின்றமையினால் குவைத் மேற்கண்ட தீர்மானத்தை எடுத்தது.

எவ்வாறெனினும் மார்ச் 13 ஆம் திகதி முதல் குவைத்துக்கான தனது வழமையான விமான சேவைகள் தொடரும் என்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.