2019 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் தொகையானது 17.7 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹானில் தோற்றம் பெற்று சர்வதேச நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனாவின் தாக்கமே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

2019 ஜனவரியில் 244,239 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். எனினும் 2020 ஜனவரியில் 228,434 பேர் மாத்திரம் வருகை தந்துள்ளனர்.

இது 6.5 வீத வீழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.

அதேபோல் 2019 பெப்ரவரியில்  252,033 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். எனினும் 2020 ஜனவரியில் 207,507 பேர் மாத்திரம் வருகை தந்துள்ளனர்.

இது 17.7 வீத வீழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிலிருந்து 41,448 பேரும் சீனாவிலிருந்து 22,363 பேரும் பிரிட்டனிலிருந்து 21,138 பேரும் ரஷ்யாவிலிருந்து 19,616 பேரும் ஜேர்மனிலிருந்து 11,494 பேரும் பிரான்ஸிலிருந்து 9,352 பேரும் உக்ரேனலிருந்து 8,549 பேரும் அவுஸ்திரேலியா 8,115, அமெரிக்கா 7,494, பொலாந்திலிருந்து 5,577 பேரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்கலாக ஏனைய நாடுகளிலிருந்து மொத்தமாக 228,434 பேர் இலங்கை வந்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவிலிருந்து 35,309, பிரிட்டனிலிருந்து 26,348, ரஷ்யாவிலிருந்து 20,948, ஜேர்மனிலிருந்து 16,405, பிரான்ஸ் 11,430, அவுஸ்திரேலியா 9,578, அமெரிக்காவிலிருந்து 7,803, உக்ரேனிலிருந்து 6,072, கனடாவிலிருந்த 5,482, பொலாந்திலிருந்து 4,693 சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்கலாக மொத்தம் 207,507 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை 2020 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் சீனாவிலிருந்து 2,058 சுற்றுலாப் பயணிகள் மாத்திரம் வருகை தந்துள்ளனர். 

இதனால் கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முறையாக இலங்கைக்கு சுற்றுலா வரும் முதல்தர 10 நாடுகள் பட்டியலில் சீனா இடம்பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.