வவுனியா மரக்காரம்பளை பகுதியில் வீதியோரத்தில் செல்லொன்று விஷேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று காலை மரக்காரம்பளை வீதிக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் ஈச்சங்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அவ்விடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் விசேட அதிரடி படையினருக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.

இன்று பிற்பகல் 3 மணியளவில்  அப்பகுக்கு சென்ற மடுகந்தை விஷேட அதிரடி படையினர்  செல்லை அவ்விடத்திலிருந்து அகற்றி செயலிழக்க செய்திருந்தனர்.

குறித்த இடத்திற்கு அண்மித்த பகுதியில் முன்பு இராணுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.