படகுகள் காணாமல் போனதால் கச்சதீவில் தவிக்கும் பொதுமக்கள்

By T Yuwaraj

08 Mar, 2020 | 02:54 PM
image

கச்சதீவு, அந்தோனியார் திருவிழாவிற்கு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்ற படகுகள் அடங்கலாக 10 படகுகள் காணாமல் போயுள்ளதால் கச்சத்தீவில் பயணத்தை தொடரமுடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

கடற்கரையில் கட்டிவிடப்பட்ட நிலையில் அவை காணாமல் போயுள்ளமையால் அங்குள்ளவர்கள் வீடு திரும்ப முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் படகுகளைத் தேடும் பணியை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right