சட்டவிரோதமாக தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் இந்திய பிரஜைகள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.  

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்த இவர்கள், கடந்த சில காலமாக இலங்கையின் பல பாகங்களிலும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.