சமூகத்தின் உரிமைகளையும்,பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடிய தலைமைகளை பாராளுமன்றம் அனுப்புங்கள் ;அப்துல்லா மஃறூப் 

Published By: Digital Desk 4

08 Mar, 2020 | 10:58 AM
image

சமூகத்தின் உரிமைகளையும்,பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடியவர்களை இம் முறை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

தம்பலகாமப் பகுதியில் இன்று (08) இடம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில்,

பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை ஜனாதிபதி சொல்வதைப் போன்று 150 ஆசனங்களையோ ,முன்னால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொல்வதைப் போன்று 113 ஆசனங்களையோ எந்தப் பெரும்பான்மை கட்சிகளும் பெற முடியாது. ஆகக் குறைந்தது 105 ஆசனங்களையே பெற முடியும் இதில் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் சிங்கள,முஸ்லிம்  மலையகத்தை சேர்ந்த கட்சிகள் இணைந்து 45 அல்லது 55 ஆகக் குறைந்த பட்சம் ஆசனங்களை பெற முடியும் .

இதை விடுத்து மக்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பீதியையும் அச்சுறுத்தலையும் மக்கள் மத்தியில் அறிக்கைகளை விட்டு வருகிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தை ஏப்ரல் 26 ம் திகதி சிறுபான்மை மக்கள் தீர்மானிக்க வேண்டும் மாவட்டத்திலும் தேசியத்திலும் குரல் கொடுக்கக் கூடிய எந்த சவாலுக்கும் முகங்கொடுக்கக் கூடியவர்களை பாராளுமன்றம் அனுப்புங்கள் இதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும்

தவற விடும் பட்சத்தில் உரிமைகளை இழந்து அடிமைச் சமூகங்களாக மாற்றப்பட்டு விடுவோம்.

சமூக ஒற்றுமை நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆட்சி அதிகாரத்தை எம்மால் கண்டு கொள்ள முடியும்.

சமூகத்தின் இறுப்பை பாதுகாக்கக் கூடிய மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் துணிச்சலுடன் பணியாற்றும் தலைவர்களை இம் முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் சக்தியாக மாற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41