எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியானது அக் கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் அமைக்கப்பட்ட பனை தென்னை வள சகூட்டுறவுச் சங்கத்தின் புதிய கட்டிடத்தை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்திருந்தார்.
இதன் பின்னர் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பல்வேறு கட்சிகளும் அதே போல புதிய புதிய கூட்டணிகளும் தேர்தலில் போட்டியிடுகின்ற சின்னங்கள் தொடர்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பிலும் அறிவித்துள்ளன.
அதே நேரத்தில் தேர்தல் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பில் இன்னும் சில கட்சிகள் அறிவிக்காத நிலைமையும் இருக்கின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்திலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள்ச் சின்னத்திலும், தமிழ் மக்கள் கூட்டணி மீன் சின்னத்திலும் களமிறங்கவுள்ளன. இதே போல தென்னிலங்கை தேசிய கட்சிகள் பலவும் வடக்கில் களமிறங்கவும் இருக்கின்றன.
குறிப்பாக வடக்கில் பிரதான தமிழ்க் கட்சிகளில் ஒன்றாக இருக்கின்ற ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி தேர்தலில் போட்டியிடும் சின்னம் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பில் எந்தவிதமான அறிவித்தல்களையும் மேற்கொள்ளாத நிலைமை இருந்தது. அதே நேரத்தில் தனித்தா அல்லது அரசுடன் இணைந்து கூட்டாக போட்டியிடுகின்றது என்பது தொடர்பில் பல்வெறு கருத்துக்கள் வெளியிடப்பட்டும் வந்திருந்தன.
இவ்வாறான நிலைமையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியானது அக் கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகவும் தமது கொள்கைகளுடன் உடன்படுகின்ற கட்சிகளையும் ஏனைய தரப்பினர்களை இணைத்துக் கொண்டு கூட்டாக பயணிக்க உள்ளதாகவும் அதே நேரத்தில் முற்பொக்கு சக்திகளையும் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டிருக்கின்றதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM