இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரர் வணிந்து ஹசரங்கவை உலகில் பத்து பெறுமதிவாய்ந்த வீரர்களில் ஒருவர் என தான் கருதுவதாக  அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நபர் மிகவும் விசேடமானவர் அவரிடம் ஒரு பந்து வீச்சாளரிற்கான அனைத்து தந்திரோபாயங்களும் உள்ளன, என மிக்கி ஆர்தர்  வனிந்து ஹசரங்க குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் டொப்ஸ்பின்னர் வீசுகின்றார், அவரின் பாக்கான்ட் கூக்லியை என்னால் கூட விளையாட முடிவதில்லை என தெரிவித்துள்ள மிக்கி ஆர்தர் அவர் ஒரு துடுப்பாட்ட வீரரும் கூட மிகச்சிறந்த களத்தடுப்பு வீரர் என தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள பத்து பெறுமதியான வீரர்களில் அவரையும் நான் சேர்த்துக்கொள்வேன் என ஹசரங்க குறித்து கருத்து வெளியிட்டுள்ள மிக்கி ஆர்தர் பலரிற்கு அவரை பற்றி தெரியாது,அவர் ஒரு மறைந்திருக்கும்;  மாணிக்கல்  அவரின் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து அணி கடுமையான சவாலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள மிக்கி ஆர்தர் இலங்கையில் தற்போது வெப்பநிலை அதிகமாக காணப்படுகின்றது இரண்டு டெஸ்ட் தொடரில் நீங்கள் ஓய்வெடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியினர் தென்னாபிரிக்காவிற்கு எதிரான வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய டெஸ்ட் தொடரிலிருந்து வந்துள்ளனர்,இலங்கையில் நான்காம் ஐந்தாம் நாட்களில் சுழற்பந்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியில் மீண்டும் குசால் ஜனித் பெரேரா இடம்பெறுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.