அலுவலகங்களில் அத்துமீறும் ஆபாச நகைச்சுவைகள்

Published By: Rajeeban

07 Mar, 2020 | 04:16 PM
image

பிபிசி 

அன்று தனது முதல் வேலையில் இணைந்து கொண்ட கேட்டிற்கு என்ன சொல்வது என தெரியாத நிலையேற்பட்டது.

தற்போது வெற்றிகரமான அதிகாரியாக பணியாற்றி வரும் அவர் அன்று வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பதற்காக எவ்வளவு கடினமான வேலையையும் செய்வதற்கு தயாராகயிருந்தார்.

ஆனால் அவர் தொடர்ச்சியான -பாலியல் ரீதியிலான மறைமுக கேலிகளை எதிர்பார்க்கவில்லை.

அவர் சிவப்பு நிற ஹீல்ஸ் அணிந்த போதெல்லாம் அவரது மேலதிகாரிகளில் ஒருவர் ஆபாசமான கேலிகளில் ஈடுபட்டார்.

ஏனைய கூட்டங்களில் சிரேஸ்ட ஆண் ஊழியர்கள் இவ்வாறான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவது வழமை.

அவர் தான் வேலையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்த பின்னர்  மனிதவள பிரிவினரை சந்தித்தவேளை இவ்வகையான பாலியல் கேலிகள் - காரணமாக நான் தற்கொலை செய்ய நினைத்தேன் என குறிப்பிட்டார்.

இழிவுபடுத்துதல்

கேட்டின் அனுபவம் மிகவும் மோசமானது அதேவேளை பலர் அலுவலகங்களில் இவ்வாறான நகைச்சுவைகள் எல்லை மீறுபவையாக உள்ளன என தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கருத்து தெரிவித்த 200,000 பேரில் 16 வீதமான பிரி;ட்டிஸ் பெண்கள்  மாத்திரமே வேலைதளங்களில் ஆபாச நகைச்சுவைகள் கேலிகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என தெரிவித்திருந்தனர்.

பிரிட்டனை சேர்ந்த 28 வீதமான ஆண்கள் அலுவலகங்களில் பாலியல் ரீதியிலான நகைச்சுவைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என தெரிவிக்கின்றனர்.உலகின் ஏனைய பகுதிகளை சேர்ந்த ஆண்களை விட பிரிட்டனை சேர்ந்த ஆண்களிடம் இதனை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் காணப்படுகின்றது.

உலகின் 27 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பெல்ஜியம்மற்றும் சீனாவில் அலுவலகங்களில் ஆபாச பேச்சு என்பது வழமையான விடயமாக காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த இரு நாடுகளிலும் 47 வீதமான ஆண்கள்  அலுவலகங்களில்  பாலியல் ரீதியிலான நகைச்சுவைகள் ஆபாச பேச்சுக்களில் ஈடுபடுவது வழமையாக காணப்படுகின்றது.

மெக்சிக்கோ அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் இந்த வகை நடவடிக்கைளில் 13 வீதத்திற்கும் குறைவானவர்களே ஈடுபடுகின்றனர்.

இதேவேளை இவ்வகை போக்கிற்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் பிரிட்டனை சேர்ந்த பெண்கள் துணிச்சல் மிகுந்தவர்களாக காணப்படுகின்றனர்.

ஆபாச பேச்சுக்கள் கேலிகள் குறித்து ஏனையவர்களிற்கு தாங்கள் தெரிவிப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.

அலுவலகங்களில் இவ்வாறான நகைச்சுவைகளை தவிர்ப்பது அல்லது ஆண் நண்பர்களுடன் காணப்படுகின்ற வேளையில் மாத்திரம் இவ்வாறான நகைச்சுவைகளை பகிர்ந்துகொள்வது சக பெண் ஊழியர்களிற்கு உதவுகின்ற விடயமாக அமையும் என தெரிவிக்கின்றார் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆய்வாளர் ஹிலாரி மார்கோலிஸ்.

பல பெண்கள் இவ்வாறான நகைச்சுவைகளிற்கு சிரித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இல்லாவிடில் அவர்கள் நகைச்சுவை  உணர்வற்றவர்கள் என்ற முத்திரை குத்தப்படலாம் என தெரிவிக்கும் அவர் அதேவேளை இந்தவகையான வேடிக்கை பேச்சுக்களால் பெண்கள் தாங்கள் இழிவுபடுத்தப்படுவது போல உணரலாம் எனவும் குறிப்பிடுகின்றார்.

பல வேளைகளில் சிரிப்பை ஏற்படுத்துவதை மையமாக கொண்டே இந்த வகை நகைச்சுவைகள் வெளியாகின்றன என தெரிவிககும்  மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆய்வாளர் ஹிலாரி மார்கோலிஸ். சில வேளைகளில் பெண்களை காயப்படுத்தும் நோக்கத்துடனும் ஆபாச கேலிகள் இடம்பெறுகின்றன என குறிப்பிடுகின்றார்.

இந்த வகை நகைச்சுவைகள்  பெண்களின் முன்னேற்றத்தை தடுப்பதுடன் அவர்கள் தாங்கள் யார் என்பதை மறைக்க நினைக்கும்நிலையை உண்டுபண்ணுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களிற்கு சுதந்திரமில்லை என பெண்கள் நினைத்தால் அது அவர்களின் முன்னேற்றத்தை பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right