உலகம் முழு­வதும் ஏற்­பட்­டுள்ள ஐ.எஸ் அமைப்பினரின் அச்­சு­றுத்தல் கார­ண­மாக, இலங்கை விமான நிலையம் மற்றும் துறை­மு­கங்­களின் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக பிரதி அமைச்சர் அசோக் அபே­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­விக்கையில்;

ஐ.எஸ்.அமைப்பினரின் உலகின் பல்­வேறு நாடு­களில் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் பலர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து எமது நாட்டின் துறை­மு­கங்­களின் விமான நிலை­யங்­களில் பாது­காப்பு அதி­க­ரி­க்கபட்­டுள்­ளது. விசேட ஆய்வு குழு ஒன்றை நிய­மித்­துள்ள நாம் விமான நிலையம் மற்றும் துறை­முகம் என்­ப­வற்றின் பாது­காப்பை பலப்­ப­டுத்த நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்ளோம் என்றார்.

அண்­மையில் ஐ.எஸ். அமைப்பினரின் நட­வ­டிக்­கை­களால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு ஆபத்து இருப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் அறி­வித்­தி­ருந்தார். முன்­ன­தாக பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் ஐ.எஸ்.ஆயுததாரிகள் மிலேச்சத்தனமாக மேற் கொண்ட தாக்குதலில் 130 பேர் வரை கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.