பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் இன்று அதிகாலை கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு , 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உயர் கட்டிடமொன்றில் எட்டாவது மாடியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அத்தோடு குறித்த பகுதிக்கு விரைந்த தீயனைப்பு படையினர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதோடு , காயமடைந்த நபர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அத்தோடு அக் கட்டிடத்தில் இருந்த 83 பேரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பாடசாலையில் தங்க வைக்கப்ட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து.

Image Help : Sputnik News