கைது செய்யப்பட்ட பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவை எதிர்வரும் ஜுலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று காலை நுகேகொடை, பாகொடை வீதியிலுள்ள அலுவலகத்தில் வைத்து உதய கம்மன்பில பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தனியார் நிறுவனமொன்றிற்கு சட்டவிரோதமான முறையில் பங்குகளை விற்பனை செய்தமை தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.