வுகானில் சிக்கிய புற்றுநோயாளி- வெளியேற்றிய மருத்துவமனை- புதிய பகுதிக்கு செல்வதற்கு அனுமதி மறுத்த அதிகாரிகள்- மனதை பிழியும் சம்பவம்

Published By: Rajeeban

07 Mar, 2020 | 11:55 AM
image

பிபிசி 

சீனாவின் சோதனை சாவடியொன்றில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அனுமதிமறுக்கப்பட்ட சம்பவமும் அந்த பெண்ணின் தாயரின் கதறலும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் வுகானில் சிகிச்சை பெற்றுவந்த தனது மகளை அழைத்துக்கொண்டு  ஜியாங்ஜி மாகாணத்திற்கு செல்ல முயன்ற தாயே இந்த வேதனைiயான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.

தாயார் ஒரு கையில் வாளி  மற்றும் துணிகள் அடங்கிய பொதியுடன்  மற்றொரு கையால் மகளை பிடித்தபடி காணப்படும் படம் வெளியாகியுள்ளது.

ஹ_ பிங் என்ற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் வுகானில் உள்ள மருத்துவமனையொன்றில் கிசிச்சை பெற்றுவந்துள்ளார்.

எனினும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதை தொடர்ந்து வுகானின் வைத்தியசாலைகள் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல் திணறியுள்ளன.

ஜனவரி 26 ம் திகதி வுகான் மருத்துவமனை ஹ_ பிங்கிற்கு இடமில்லை என  தெரிவித்துள்ளது.அவரை வேறு எங்காவது செல்லுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதன் பின்னர் அவரின் குடும்பத்தினர் வுகானில் வேறு பத்து மருத்துவமனைகளிற்கு சென்றுள்ளனர். எங்கும் அவர்களிற்கு இடம் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து அவருடைய தாயார் தனது மகளை ஜியாங்ஜி மாகாணத்திற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார்.

எனினும் அந்த பகுதிக்குள் நுழைவதற்கான பாலத்தில் அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஹ_ பிங்கிடம் உரிய அனுமதிப்பத்திரம் இல்லை என தெரிவித்து அதிகாரிகள் அவர்களிற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

இதனை அறிந்ததும் தாயார் வீதியில் நின்றபடி கதறியழ ஆரம்பித்துள்ளார்.

எனது மகளையாவது உள்ளே அழைத்து செல்லுங்கள், எனக்கு அனுமதி வழங்கவேண்டிய அவசியமில்லை,தயவு செய்து எனது மகளிற்கு அனுமதி வழங்குங்கள் என அவர் கதறியுள்ளார்.

தாயரின் இந்த கதறலை ரொய்ட்டரை சேர்ந்த இரு பத்திரிகையாளர்கள் அவதானித்துள்ளனர்.

எனது மகள் மருத்துவமனைக்கு செல்லவேண்டும்,அவரிற்கு சிகிச்சை அவசியம் ஆனால் அதிகாரிகள் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கின்றார்கள் என ஹ_ பிங்கின் தாயார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் அதனை தெரிவித்துக்கொண்டிருந்தவேளையில் குபேயை சேர்ந்தவர்கள் ஜியாங்ஜி மாகாணத்திற்குள் நுழைவதற்கு அனுமதி யில்லை என்ற உத்தரவை ஒலிபெருக்கிகள் வெளியிட்டுள்ளன.

எனது மகளின் உயிரை காப்பாற்றவேண்டும் என்பதே எனது விருப்பம் என தாயார் தெரிவித்துள்ளார்.

தாயார் பல மணிநேரம் மன்றாடியுள்ளார்.

இதன் பின்னர் அந்த பகுதிக்கு அம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது , அவர்கள் ஏற்றப்பட்டுள்ளனர்.

ரொய்ட்டர் செய்தியாளர்கள் உடனடியாக தாங்கள் பார்த்ததை பதிவு செய்துள்ளனர். இது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதன் பின்னர் பிபிசியின் செய்தியாளர்கள் தாயையும் மகளையும் தேடிக்கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் ஹ_ பிங்கின் வருங்கால கணவரை சந்தித்துள்ளனர்.

அவர் நடந்ததை தெரிவித்துள்ளார், எனது மாமியார் பல மணிநேரமாக கெஞ்சிக்கொண்டிருந்தார்,காவல்துறையினர் அவரிடம் வந்து முழு விபரங்களையும் பெற்றனர்,அதன் பின்னர் அவர்கள் ஹ_ பிங் ஆபத்தான நிலையில் இருப்பதையும் அவரிற்கு சிகிச்சை அளிக்கவேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர்  ஹ_ பிங்- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரிற்கு சிறந்த கிசிச்சைகள் வழங்கப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07
news-image

பொன்சேகாவை அரவணைப்பாரா அநுர?

2025-03-23 12:42:43