பேஸ்புக் தளத்தில் மருத்துவ முகக்கவச விளம்பரங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்ய திட்டமிட்டப்படுள்ளது.

இதனை பேஸ்புக் தயாரிப்பு நிர்வாக தலைவர் ராப் லெதர்ன் தனது டுவிட்டரில்  தெரிவித்துள்ளாார்.

அதில், " மருத்துவ முகக்கவச விளம்பரங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை தடை செய்கிறோம். நாங்கள் கொரோனா வைரஸ்  தொற்று குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மக்கள் பொது சுகாதார அவசரநிலையை  பயன்படுத்த முயற்சிப்பதைக் கண்டால் எங்கள் கொள்கைகளுக்கு தேவையான புதிய விடயங்களை உருவாக்கும் " என்று கூறியவர், இந்த மாற்றம் வரும் நாட்களில் வெளியிடப்படும்என தெரிவித்துள்ளார்.