மித்தெனிய , காரிமடித்த பிரதேசத்தில் கடந்த 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரோயகம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், 36 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், மித்தெனிய, தம்பேதலாவ பிரதேசத்தில் மரண வீடொன்றுக்கு சென்று திரும்பிய போதே, இத்துப்பாக்கி சூடு இடம் பெற்றுள்ள நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேறகொண்டு வந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை இன்று கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.