வடமராட்சி கிழக்கு கோவில் பகுதியில் கடந்த நான்காம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் உட்படுத்தப்படவில்லை என தெரிவித்து மனித உரிமை ஆணைக் குழுவில் நேற்று முன் தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 39 வயதான செல்வராசா உதய சிவன் என்பவர் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

இந் நிலையில் தனது கணவர் இன்று வரை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவில்லை என தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த நபரின் மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பகல் வேளைகளில் கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதுடன் இரவு நேரத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.