வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 36000 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் அரசாங்கத்தினால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் கொலன்னாவ பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்க அடிப்படை உதவிகளை வழங்குவது அத்தியாவசிய தேவையாகும். ஆயினும் தொடர்ந்தேட்சையான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், சமூக மாற்றத்திக்கும் கொலன்னாவ பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சி மட்டுமே துணைப்புரியும். தற்போது போதைப்பொருளுக்கு மட்டுமே பழகிபோன இப்பிரதேசத்தில்; கல்வி மூலம் சிறந்த மாற்றத்தை கொண்டுவர முடியும் என நினைக்கின்றேன்.

எனவே, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கல்வி உடமைகளை இழந்துள்ள மாணவர்களின் எதிர் காலத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் குறித்த இழப்பீடுகள் வழங்கபடும். இதற்கென மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.