சர்வதேச ரீதியில் 100,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினார் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி கொரோனா தொற்றினால் இதுவரை 100,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவினால் உலகளாவிய ரீதியில் 98,202 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது. இந் நிலையிலேயே ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் மேற்கண்ட எண்ணிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Photo Credit : CNN