கொரோனா தொற்று தொடர்பான அச்சம் காரணமாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 மாதக் குழந்தை இன்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் வசித்து வந்த பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 27 ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளனர்.

இந் நிலையில் இலங்கை திரும்பிய அந்த தம்பதியினரின் ஏழு மாதங்களேயான அவர்களது குழந்தைக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

அதனால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குழந்தை நேற்று முன்தினம் புதன்கிழமை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. 

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வைத்தியப் பரிசோதனைகளில் குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந் நிலையிலேயே குழந்தை இன்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.