இந்தியாவில், திருச்சி மணப்பாறையை அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைபட்டியைச் சேர்ந்த ஒருவர் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்துள்ளார்.

இந்த காளை பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சிறந்து விளங்கியது. இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக அந்த ஜல்லிக்கட்டு காளை நேற்று மதியம் உயிரிழந்துள்ளது.

இதையடுத்து அந்த காளைக்கு மாலை அணிவித்து பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடு. பின்னர் காளை இறந்த தகவல் அறிந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பலரும் அங்கு வந்து இறந்த காளையை வணங்கி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இறுதியாக காளைக்கு இறுதிச் சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்ட பின்னர் ஊர்வலமாக தூக்கிச் செல்லப்பட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில்  அடக்கம் செய்யப்பட்டடுள்ளது.

அப்போது காளையின் உரிமையாளர் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களையும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறுதியில் அனைவரும் காளையை வணங்கிவிட்டு சென்றனறுள்ளனர்.