கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பை அண்மித்துள்ள பகுதிகளில் நீர் வினியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி மதியம் 12 மணி தொடக்கம் இரவு 12 மணி வரை குறித்த நீர் வினியோக தடை அமுலில் இருக்கும்.

இதற்கமைய மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ஹோமாகம, ருக்மல்கம, பெலேன்வத்த, மத்தேகொட, கொடகம மீபே, ஹங்வெல்ல, கலுஹக்கல மற்றும் பாதுக்க போன்ற பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வினியோகம் தடைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.