கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா நாளை

Published By: Daya

06 Mar, 2020 | 04:11 PM
image

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா நாளை சனிக்கிழமை காலை இடம் பெறவுள்ளது. 

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு  கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாவதுடன் திருச் செரூப செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும்.

நாளை சனிக்கிழமை  காலை திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து மக்கள் படகுகள் மூலம் கச்சதீவை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை மதியம் படகுகள் மூலம் பயணமாகியுள்ளனர்.

தலைமன்னார் கடற்கரையில் கடற்படையினர் குடும்ப பதிவுகளை மேற்கொண்டு சோதனை நடவடிக்கைகளின் பின் படகுகள் மூலம் பயணமாகி உள்ளனர்.

தலைமன்னார் முதல் மன்னார் பல்வேறு கிராமங்களில் இருந்தும் மக்கள் இவ்வாறு கச்சதீவை  நோக்கி பயணமாகி உள்ளனர்.

இதே வேளை கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்திற்குச் செல்லும் பக்தர்கள் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும்  அதிகாரிகள் பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தகக்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56