மாஹவெல - மடவல உல்பத்த பகுதியில் வியாழக்கிழமை முற்பகல் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர் ஓடுவதற்காக கால்வாயொன்றை வெட்டிக்கொண்டு இருந்த போதே குறித்த நபரின் மீது  திடீரென மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

அதனால் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பரிவு தெரிவித்தது. 

குடாகம - எலஹெர பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.