காசா பேக்கரியில் ஏற்பட்ட தீ பரவலால் ஆறு சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி, 60 பேர் காயம்!

Published By: Vishnu

06 Mar, 2020 | 03:44 PM
image

காசாவில் உள்ள பேக்கரியொன்றில் நேற்யை தினம் ஏற்பட்ட தீ விபத்தினால் குறைந்தது 09 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்த ஒன்பது பேரில் ஆறு சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளதுடன் காயமடைந்தவர்களில் 14 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பாலஸ்தீன் சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.

காசாவின் நுசோராட் என்ற முகாமில் அமைந்துள்ள பேக்கரியொன்றிலேயே இந்த தீ விபத்தானது இடம்பெற்றுள்ளதுடன், அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் தொழிற்சாலைகள் மற்றும் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீயானது விரவைாக பரவியுள்ளது.

ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள காசாவின் இந்த பேக்கரியில் எரிவாயு கசிவின் காரணமாகவே பல சமயல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காசாவின் உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன் பின்னர் பொது மக்கள் மற்றும் தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீப் பரவலானது சுமார் 3 மணி நேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த அனர்த்ததினால் 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 60 பேர் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo Credit : Aljazeera

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17