ஆப்கானின் தலைநகர் காபூலில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்தி வந்த நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

அத்தோடு குறித்த கூட்டத்தில் அந்நாட்டு முக்கிய அரச அதிகாரியான அப்துல்லா பங்குபற்றியுள்ள நிலையில் , அவர் எவ்வித காயங்களுக்குள்ளாகவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதல்களுக்கு தலிபான்கள் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் உயிரிழப்புகள் தொடர்பிலும் எவ்வித செய்திகளும் வெளி வராத நிலையில் , அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் மனித குலத்திற்கு எதிரான பெரும் குற்றமென அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி ஊடகங்களுக்கு கருத்து வெளிட்டுள்ளார்.

அத்தோடு கடந்த ஆண்டும் இவ்வாறானதொரு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதாகவும்  தெரிவித்த அவர், இச் சம்பவம் வன்மையாக கண்டிக்கூடியதெனவும் அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்தார்.

எனினும் சம்பவம் தொடர்பில் விசேட பிரிவினர் முழு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Image : REUTERS