சாலாவ இராணுவ களஞ்சியசாலை வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 303 வீட்டு உரிமையாளர்களுக்கு 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக சீதாவாக்கை பிரேதச செயலாளர் எச்.எம்.எஸ்.கே. பண்டார தெரிவித்துள்ளார்.

சாலாவ பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மூவர் கொண்ட உப குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (17) நியமித்துள்ளார்.

குழுவின் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சீதாவாக்கை பிரதேச செயலகத்தில் விசேட சந்திப்பொன்றை நடத்த தீர்மானித்துள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் எதிர்வரும்  புதன்கிழமை பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கை குறித்த குழுவிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட 331 வீடுகள் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, 81 வீடுகளின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.