கினிகத்தேனை  வாகன விபத்தில் இளைஞன் பலி

By T Yuwaraj

05 Mar, 2020 | 10:00 PM
image

கினிகத்தேனை  ஹொரகட பிட்டவல வீதியில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை  பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேனையில் இடம்பெற்ற கோர விபத்து - இளைஞன் பலி!

இச்சம்பவம் இன்று (05) முற்பகல் 2.00 மணி அளவில் ஹொரகட  சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் ஹொரகட பிட்டவல பகுதியை சேர்ந்த 19 வயதான அனுச தில்சான் என்ற இளைஞனே இவ்விபத்தில் பலியானதாகவும் இவரது சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, 

கினிகத்தேனை பகுதியிலிருந்து ஹொரகட வழியாக பிட்டவல நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஹொரகட வழியாக கினிகத்தேனையை நோக்கி சென்ற லொறியுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதையடுத்து குறித்த மோட்டார் சைக்கிள் வளைவு பகுதியில் வழுக்கிச் சென்றதால் இளைஞனுக்கு வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது.இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right