அரச நியமனம் இடைநிறுத்தம் செய்யப்பட்ட, நியமனம்  கிடைக்கப்பெறாத பட்டதாரிகளுடன் அவசரக் கலந்துரையாடல்

Published By: Digital Desk 4

05 Mar, 2020 | 06:41 PM
image

வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினால் அரச நியமனம் கிடைக்கப்பெற்று இடை நிறுத்தம் செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் அரச நியமனம் கிடைக்கப்பெறாத பட்டதாரிகளுக்கான தீர்மானம் மிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த கலந்துரையாடல் திர்வரும் 09.03.2020 திங்கட்கிழமை காலை 11மணியளவில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

வடமாகாண பட்டதாரிகளின் அரச நியமனங்களில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு பெற்றுக்கொள்ளும் நோக்கில் அண்மையில் அரச நியமனம் கிடைக்கப்பெற்று இடை நிறுத்தம் செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் தவறாது கலந்துகொள்ளுமாறு வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ம.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் 0777425286, செயலாளர் 0773301064, பொருளாளர் 0770763688 ஆகிய இலங்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20