அனைவருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகள் ஏற்பட்டால் எவ்வித பேதங்களும் நாட்டில் ஏற்படாது : ஜனாதிபதி 

By R. Kalaichelvan

05 Mar, 2020 | 05:56 PM
image

இனம் , மதம் மற்றும் மொழி அல்லது வாழும் பிரதேசத்தை கவனிக்காது சமுதாயத்தில் அனைவருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமாயின் எவ்வித பேதங்களும் நாட்டில் ஏற்படாது. முன்வைத்துள்ள மக்கள் மயப்பட்ட பொருளாதார மாதிரியில்  இவ்விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டு  தயாரிக்கப்பட்டுள்ளது. என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்துறை சார்ந்தவர்களுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெற்ற  கலந்துரையாடலின் போது  ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலன்களை மக்கள் அனைவருக்கும் விசேடமாக வறிய மக்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அவர்களை வறிய நிலையிலிருந்து மீட்டெடுத்து ,பொருளாதாரத்தின் சிறப்பான பங்காளர்களாக மாற்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை துரிதமாகவும் சிறப்பானதாகவும் முன்னேற்ற வேண்டும்.  

நவீன டிஜிட்டல் யுகத்தின் தேவைக்கேற்ப உயர் தரத்திலான திறமை வாய்ந்தவர்களை உருவாக்கி   இலகுவில்  தொழில்  வாய்ப்புக்களை      பெற்றுக்  கொள்ளும்   சூழலை  ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.  தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு பொருளாதாரத்தை மிஞ்சிய விரிவுபடுத்தப்பட்ட தொழில்வாய்ப்புகளுக்கு அவசியமான திறன் அபிவிருத்தியை மக்களுக்கு சென்றடைய செய்யும் சவாலை  அரசாங்கம்  பொறுப்பேற்றுள்ளது.

பாடசாலைஇ பயிற்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து உருவாகும் தொழிற்படையினருக்கும் தொழிற்சந்தையின் கேள்விக்கும் இடையில் பாரியதொரு இடைவெளி காணப்படுகின்றது.

இன்று தகவல் தொழிநுட்பத்துறை முகங்கொடுத்துள்ள பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறையை அது எடுத்துக்காட்டுகின்றது. அதனால்  கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகளை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

தேவையற்ற கட்டுப்பாடுகளை இலகுபடுத்தி அல்லது நீக்கி தடைகளற்ற பொருளாதார செயற்பாட்டிற்கு வாய்ப்பளிக்கக்கூடிய சூழலை உருவாக்குவது  அரசாங்கத்தின் முக்கிய பணியெனவும் இந்த இலக்கை நோக்கி செல்வதற்கு நவீன தொழிநுட்பத்தை பொருளாதாரத்துடன் இணைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆராய்ச்சி சேவைகளுக்காக சிட்னி பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்...

2023-01-31 18:38:48
news-image

தேர்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி...

2023-01-31 14:12:16
news-image

மொத்த செலவுடன் ஒப்பிடுகையில் சுதந்திர தினத்திற்காக...

2023-01-31 14:07:24
news-image

அக்மீனமவில் வீடு ஒன்றில் காணப்பட்ட குழியிலிருந்து...

2023-01-31 16:52:11
news-image

வசந்த முதலிகேவின் விடுதலை குறித்து சர்வதேச...

2023-01-31 16:39:26
news-image

முன்னாள் சபாநாயகருக்கு ஸ்ரீலங்காபிமான்ய விருது

2023-01-31 16:34:15
news-image

அரச செலவினங்களை மேலும் குறைக்குமாறு ஜனாதிபதி...

2023-01-31 16:29:34
news-image

ஊழல் குறிகாட்டி சுட்டெண் மதிப்பீட்டில் பின்னடைவான...

2023-01-31 16:25:13
news-image

விமான பயணங்களின் போதான குற்றங்கள் தொடர்பான...

2023-01-31 16:17:59
news-image

இறக்குமதி , ஏற்றுமதி சட்ட ஒழுங்கு...

2023-01-31 15:49:29
news-image

கெஸ்பேவ ஹோட்டல் ஒன்றின் மேல்மாடியிலிருந்து கீழே...

2023-01-31 16:16:23
news-image

வரி விவகாரம் - ஜனாதிபதியை சந்திப்பதற்கு...

2023-01-31 15:33:28