பெரிய வெங்காயத்திற்கான அரசாங்கத்தின் குறைந்தபட்ச உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி ஒரு கிலோகிராம்  பெரிய வெங்காயத்திற்கான குறைந்தபட்ச உத்தரவாத விலை 60 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதற்கும், ஒரு கிலோகிராம்  பெரிய  வெங்காயத்தின் அதிகபட்ச சில்லறைவிலையாக 199 ரூபாயை  நிர்ணயிக்க நிதியமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை  அங்கிகாரம் வழங்கியுள்ளது. .

பெரிய வெங்காய விலை வீழ்ச்சி காரணமாக கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காத காரணத்தால் பெரிய வெங்காய விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை   கைவிடும்   நிலைக்கு  தள்ளப்பட்டார்கள்.

அதன் காரணமாக பெரிய வெங்காய அறுவடை வீழ்ச்சியடைந்த நிலையில் பெரிய வெங்காய கொள்வனவிற்கானஅந்நிய செலாவணி அதிகரித்திருந்தது.

அதேபோல் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் பெரிய வெங்காய  விளைச்சல்   உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும்  நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை 199 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.