சிறுவர்களுக்கான பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க நாடளாவிய ரீதியில் உள்ள 20,000 சிறுவர்களுடன் ஒன்றிணைந்து கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ´மந்திர பளிங்கு´ என்ற சிறுவர் கதை ஒன்றை எழுதியே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளனர்.

சிறுவர்களின் கற்பனைத் திறன், படைப்பாற்றலைப் பயன்படுத்தி எழுத்து, சித்திரம் வரைதல் மற்றும் கவிதை எழுதல் போன்ற திறன்களின் ஊடாக இக்கதை பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

சிறுவர்களின் படைப்பாற்றல், கற்பனைத்திறன் மற்றும் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கதை எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.