யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  புதிய தொழிநுட்ப நிலையான குறைந்த செலவில் 28000 கொங்கிறீட் பெனல் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் முதற்கட்டமாக 7 ஆயிரம் ஓடுகளுடனான வீடுகளை  நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இருப்பினும் எதிர்பார்த்த வகையில் இந்த செயற்திட்டத்திற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்க முடியாமை காரணமாக ஆரம்பத்தில் 1000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக இலங்கை வங்கி ஊடாக காலத்திற்கு ஏற்ப கடன்தொகையை பெற்றுக்கொள்வதற்காக திறைசேரினால்  தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக இந்த கடன்தொகையை 1000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாகாரரான 'யப்கா தனியார்  அபிவிருத்தி ' நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பமொன்று தற்போது கைச்சாத்துப்பட்டுள்ளதாகவும் 2020 பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி சம்பந்தப்பட்ட திட்ட பணிகள் ஆரம்பிக்கப்படாததாகவும் சமூக ஊக்குவிப்பு தோட்ட  அடிப்படைவசதிகள் அபிவிருத்தி அமைச்சரினால்    சமர்ப்பிக்கப்பட்ட  யோசனைக்கு  அமைவாக அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளது.