சிரியாவில் ரஷ்படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் குழந்தை உட்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் இட்லிப் நகரின் கோட்டையில் குறித்த வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 15 பொதுமக்கள் உட்பட ஒரு குழந்தை கொல்லப்பட்டதாக பிரிட்டனை தளமாகாக்கொண்ட போர் கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மொஸ்கோ ஆதரவு பெற்ற ரஷ்ய படையினர் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜிஹாதி ஆதிக்கம் செலுத்தும் இட்லிப் பகுதியில் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு குறித்த பகுதிகளில் இருந்த ஒரு மில்லியன்  பொதுமக்கள் , பெண்கள் உட்பட குழந்தைகள் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதேவேளை குறித்த பகுதிகளில் இருதரப்புக்கிடையுமான தாக்குதல்களில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் , பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image :  (AFP Photo/AAREF WATAD)