மஹர பள்ளிவாசலை உரிய நிர்வாக சபையினரிடம் மீள ஒப்படைக்குமாறு உத்தரவு

Published By: Digital Desk 4

05 Mar, 2020 | 02:36 PM
image

மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமைந்­துள்ள ஜும்ஆப் பள்­ளி­வாசலை, மீளவும் உரிய பள்ளிவாசல் நிர்வாக சபையினரிடம் ஒப்படைக்குமாறு, அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா,   சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளார். 

குறித்த பள்ளிவாசல் விவ­கா­ரம்  தொடர்பில்,

பைஸர் முஸ்­த­பா  தலை­மையிலான குழுவினர், கடந்த (26) புதன்கிழமையன்று நீதி அமைச்சில் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இக்குழுவில், மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் உட்­பட மூன்று பள்­ளி­வாசல்களின் நிர்வாகிகளும்  கலந்து கொண்டிருந்தனர்.   

இதன்போது, பைஸர் முஸ்தபா குழுவினர், நூறு வரு­டங்­க­ளுக்கும் மேலாக பழை­மை­ பொருந்திய  குறித்த பள்­ளி­வாசல், சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்­ள­துடன், அங்கு புத்தர் சிலையொன்றும்  வைக்­கப்­பட்டு, சமய வழி­பா­டுகள் இடம்­பெ­றுவதாகவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். அத்துடன், முஸ்­லிம்­களின் சமய வழி­பா­டு­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், குறித்த பள்­ளி­வா­சலை மீளவும்  சிறைச்­சாலை நிர்­வா­கத்­தி­ட­மி­ருந்து விடு­வித்துத் தரு­மாறும் அவர்கள்  கோரிக்கை விடுத்­தனர்.

1967 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, நூற்­றாண்டு காலம் பழைமை வாய்ந்த முஸ்­லிம்கள் பயன்­ப­டுத்தி வந்த இப்பள்­ளி­வாசல் மூடப்­பட்­டி­ருக்­க­வில்லை. 2019 ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இப்பள்ளிவாசலைப் பயன்படுதுவதை சிறைச்சாலை நிர்வாகம் அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தி மறுத்திருந்தது. அவசரகாலம் முடிந்ததும் இப்பள்ளிவாசல் நிர்வாக சபையிடம்  ஒப்படைக்கப்படவில்லை.  காலாகாலம் மூடி­யி­ருந்­த­தாகக் கூறி பொய்க் காரணங்களைக் காட்டி, சிறைச்­சாலை அதி­கா­ரிகள் இதனை ஓய்வு அறை­யாக மாற்­றி­யுள்­ளமை, சட்­டத்­திற்கு முர­ணா­ன­தாகும். 

இதனால், இப்­ப­கு­தியைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட முஸ்லிம்   குடும்­பங்கள், தங்கள் சமய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யாது பல்வேறு  அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­கும் உள்­ளா­கி­யுள்­ளனர் என்றும் இதன்போது  முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா நீதியமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தார். 

இதனையடுத்து,  முஸ்­லிம்­க­ளுக்கு தடை செய்­யப்­பட்­டுள்ள  குறித்த ஜும்ஆப் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு சுமு­க­மான தீர்வு பெற்றுத் தரு­வ­தாக நீதி  அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா, பைஸர் முஸ்தபா குழுவினரிடம்  உறு­தி­ய­ளித்­திருந்த நிலையிலேயே, இப்பள்ளிவாசலை மீளவும் உரிய நிர்வாக சபையினரிடம் ஒப்படைக்குமாறு  சிறைச்­சாலை ஆணை­யாளர் நாய­கத்­தைப் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவிடமிருந்து இதற்கான  உத்தரவு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஊடாக தமக்கு தகவல் தெரியப்படுத்தியிருப்பதாக, சட்டத்தரணி அலி சப்ரி  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right