இரத்தினப்புரி - அளுபத் கல மலைப்பகுதியில் நேற்று இரவு  திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த தீப்பரவலால் எந்த சேதமோ உயிரிழப்புக்களோ ஏற்படவில்லையென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது; தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.