ஓரணியில் களமிறங்குவதற்கு சஜித், ரணில் ஆலோசனை: புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்கிறார் ராஜித

Published By: J.G.Stephan

05 Mar, 2020 | 01:00 PM
image

(ஆர்.விதுஷா)

ஐக்கிய  தேசிய  கட்சியின் தலைவர்  ரணில்  விக்கிரமசிங்கவும்  ஐக்கிய மக்கள்  சக்தி கூட்டணியின்  தலைவர் சஜித்  பிரேமதாசவும் யானைச்  சின்னத்தில் ஒரே அணியில்  போட்டியிடுவதற்காக  புரிந்துணர்வு  ஒப்பந்தமொன்றில்    கைச்சாத்திடுவது குறித்து ஆராயவுள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள்  பாராளுமன்ற  உறுப்பினர் ராஜித சேனாரத்ன சஜித்  அணியினர்  ஐ.தே.க. வின்  பொதுசெயலாளராக  தம்மால்  ஏற்றுக்கொள்ளக்கூடிய  ஒருவரை  நியமிக்குமாறுவிடுத்திருக்கும் கோரிக்கைக்கு  இடம்கொடுக்க  தற்போதைய செயலாளர்   உடன்படுவதாகவும் கூறினார்

ஐக்கிய தேசிய  கட்சியின்  தலைமையகமான  சிறிகோத்தாவில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்  போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய  கேள்விக்கு பதிலளிக்கும் போதே  அவர்  இதனை  தெரிவித்தார்.  அவர்  மேலும் குறிப்பிடுகையில்

ஐ.தே.க  வின் தலைவர்  விக்கிரமசிங்கவிற்கும்  , சஜித் பிரரேமதாசவின்  கூட்டணியினருக்கும் இடையில்  புரிந்துணர்வு  ஒப்பந்தமொன்றை  மேற்கொள்ள  எதிர்பார்த்துள்ளோம். ஏனெனில் ஐக்கிய  மக்கள் சக்தி கூட்டணியின் யாப்பில் காணப்படும் குறைபாடுகளின்  காரணமாகவே  இத்தகைய முரண்பாடுகள் தோன்றியுள்ளன. ஆகவே  , எமது கட்சியின்  செயலாளர் பதவியை  அவர்களுக்கும்   ஏற்றுக்கொள்ளக்கூடிய  ஒருவருக்கு கொடுக்குமாறு  கேட்டுக்கொண்டனர். ஆகவே , இந்த பிரச்சினைக்கான  தீர்வை  கூடிய  விரைவில்   காண  முடியும் என எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறு  இணைந்து செயற்படுவதன் ஊடாக  மூன்றில்  இரண்டு பெரும்பாண்மையை  பெறும் வாய்ப்பு எமக்கு அதிகளவில் உள்ளது.  கூட்டணியின்  யாப்பு   கட்சின்  யாப்பை  போன்று  அமைந்துள்ளமையின் காரணமாகவும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.  ஆகவே, கூட்டணியின் யாப்பில்  மாற்றமேற்படும் பட்சத்தில்  எம்மால்   அவர்களுடன் இணைந்து பயணிக்ககக்  கூடியதாகவிருக்கும்.

யானை  சின்னத்தில்  போட்டியிடுவதற்கு  சஜித்  அணியினரும் இணக்கம்  தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில்  எதிர்காலத்தில்  பலமான கூட்டணியை  உருவாக்கி அதன் ஊடாக ராஜபஷ  அரசாங்கத்தை வீழ்த்துவதே எமது இலக்காகும். இந்நிலையில்  ,  ஒன்றிணைந்து பயணிப்பதன்  ஊடாக  வெற்றி  இலக்கை  அடைவதே எமது எதிர்பார்ப்பாகும்.

கேள்வி : ஐ.தே.க பொது செயலாளர் பதவியை  துறக்க   அகிலவிராஜ் காரியவசம் தயாராகவுள்ளாரா ?

 பதில்  : நிச்சயமாக  தயாராகவுள்ளார்.  கட்சியின்  ஐக்கியத்திற்காக  தன்னுடைய  பதவியை  துறக்க அவர்  தயாராகவுள்ளார்.

கேள்வி  :  மத்திய வங்கி  பிணை முறி  மோசடி  தொடர்பில்   ரவி  கருணாநாயக்க மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே?

பதில்  : அவருக்கும் மத்தியவங்கி பிணைமுறி  மோசடிக்கும் இடையில்  எந்த வித தொடர்பும் இல்லை. பிணைமுறி  மோசடி தொடர்பான  தடயவியல் அறிக்கையில்  அவருடைய  பெயர் சுட்டிக்காட்டப்படவில்லை.  மேலதிக  விசாரணைகளை நீதிமன்றமே தீர்மானிக்க  முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00