லிதுவேனியாலில் தனது மனைவிக்கு கொரோனா தொற்று உள்ளது என்ற அச்சத்தில் அவரை குளியலறையில் வைத்து கணவன் பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man Locks Wife In Bathroom Over Coronavirus Fears: Police

இந்நிலையில் கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக குறித்த பெண்ணின் கணவரும் இரு மகன்களும் அவரை குளியலறையில் வைத்து பூட்டிவிட்டு தடுத்து வைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்போது வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருடன் பேசியதால் இந்த நோய் தனக்கு தொற்றியிருக்காலாம் என எனது மனைவி தன்னிடம் கூறியதாக  அந்த நபர் பொலிஸாரிடம் தெவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை பொலிஸார் மீட்டு அம்புயூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

2.8 மில்லியன் மக்களைக் கொண்ட லித்துவேனியாவில் உள்ள குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எதிர்மறையான அறிக்கை பெறப்பட்டுள்ளதுடன் இதுவரை லித்துவேனியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.