பேஸ்புக் நிறுவனம் வொஷிங்டனின் சியாட்டில் உள்ள தனது அலுவலகம் ஒன்றை இந்த வாரத்தின் பிறப் பகுதியில் மூடவுள்ளதாக அறிவித்துள்ளது.

அங்கு பணி புரியும் ஒப்பந்தக்கார உழியர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அலுவலகம் இவ்வாறு மூடப்படுகிறது. 

இதன் காரணமாக தனது உழியர்களை வீட்டிலிருந்து தனது பணிகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் பேஸ்புக் தனது நியாட்டில் உள்ள ஊழியர்களின் நலன் கருதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது,

நாங்கள் இது தொடர்பில் எங்கள் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளோம், அனைவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் தொடர்ந்தும் பின்பற்றுவதாகவும் கூறியுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 15 மாநிலங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(GeekWire Photo / Nat Levy)