நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு. அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக விர்ச்சுவல் ரியாலிட்டி ட்ரீட்மென்ட் (Virtual Reality) என்ற புதிய சிகிச்சை முறை அறிமுகமாகியிருக்கிறது.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும், பர்கின்சன் என்ற நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கும், Schizophrenia என்ற மனச்சிதைவு பிரச்சினைக்குள்ளானவர்களுக்கும் நரம்பியல் தொடர்பான பாதிப்புகள் குறைவதற்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இத்தகையபாதிப்பிற்குள்ளானவர்களுக்கு அதிலிருந்து முழுமையான நிவாரணம் பெற Virtual Reality விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற கருவியில் அமைக்கப்பட்ட விளையாட்டுகளை விளையாடச் சொல்வதன் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த சிகிச்சை நேர்மறையான பலனை அளிப்பதாக இது தொடர்பான சிகிச்சையளித்து வரும் கீனிஸியாலஜி துறை வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இயல்பான நரம்பியல் இயக்கத்திற்கான இடையூறுகளுக்கு பெரும்பாலும் மூளையில் ஏற்படும் பாதிப்புகளே காரணம் என்றும், இத்தகையவர்களுக்கு விர்ச்சுவல் ரியாலிட்டியில் வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகள் மூலம் பயிற்சி அளிக்கும் பொழுது, அவர்களது நாளாந்த நடவடிக்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுகிறது.

இத்தகைய சிகிச்சையால் மூளையின் செயற்பாடு மீண்டும் சரியாக இயங்க தொடங்குவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்று வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.