Published by R. Kalaichelvan on 2020-03-05 09:39:43
நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வறட்சியின் காரணமாக , வளிமண்டலத்தில் அதகளவில் தூசு துகல்கள் அதிரித்து காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தின் தூசு துகள்கள் தொடர்பான அமெரிக்க குறியீட்டின் அடிப்படையில், 50 முதல் 100 வரையிலான அளவு தூசு துகள்கள் வளிமண்டலத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சில சந்தர்ப்பங்களில் அந் நிலைமை 100 முதல் 150 வரையில் அதிகரிப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் குருநாகல் நகரில் வளிமண்டலத்தின் தூசு துகள்களின் செறிவு உயர் தன்மையை அடைந்துள்ளது.
இந் நிலைமையை, வாகன நெரிசல் நிலவும் நகரங்களில் அதிகளவில் அவதானிக்க முடிவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.