துருவ் விக்ரமின் புதிய படம்

By Daya

05 Mar, 2020 | 10:48 AM
image

சீயான் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.

‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் தயாராகிவரும் கர்ணன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நட்சத்திர வாரிசு நடிகரான துருவ் விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்குகிறார். 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தை துருவ் விக்ரமை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய E4 என்டர்டைன்மென்ட் என்னும் நிறுவனம் தயாரிக்கிறது.

‘ஆதித்ய வர்மா’ படம் வணிக ரீதியாக வெற்றி பெறாததைத்தொடர்ந்து அதே நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது, அவரின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லது என்கிறார்கள் திரையுலக அனுபவஸ்தர்கள்.

துருவ்விக்ரமிற்காக இதுவரை விக்ரம் அறுபதிற்கும் மேற்பட்ட கதைகளை கேட்டதாகவும், அதில் மாரி செல்வராஜ் சொன்ன கதை பிடித்துபோனதால், அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் விக்ரமுக்கு நெருக்கமானவர்கள். இதனிடையே துருவ் விக்ரம் தற்போது கல்லூரிகளுக்கு விசேட அதிதியாக பங்குபற்ற அழைத்தால், மறுக்காமல் ஒப்புக்கொண்டு நிகழ்ச்சிக்கு சென்று இளைஞர்களிடம் உரையாற்றுகிறார். இதன் மூலம் தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ படத்தின்...

2023-01-28 15:47:38
news-image

செல்வராகவன் நடிக்கும் 'பகாசூரன்' படத்தின் வெளியீட்டுத்...

2023-01-28 14:29:03
news-image

நடிகர் ஹிர்தூ ஹாரூன் நடிக்கும் 'தக்ஸ்'...

2023-01-28 14:27:09
news-image

ஜான்சி வலைத்தள தொடரின் மூன்றாம் பாகம்...

2023-01-28 14:23:23
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடக்கிவைத்த வை.ஜி....

2023-01-29 09:44:03
news-image

ஜேம்ஸ் வசந்தன் இசையில் உருவான 'என்...

2023-01-28 13:34:52
news-image

நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கும் 'கெவி'

2023-01-28 13:31:00
news-image

விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' பட...

2023-01-28 13:21:35
news-image

சாந்தினி தமிழரசன் நடிக்கும் 'குடிமகான்' படத்தின்...

2023-01-28 13:09:36
news-image

வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்பட அப்டேட்

2023-01-28 13:02:36
news-image

யோகி பாபு நடிக்கும் 'மெடிக்கல் மிராக்கல்'...

2023-01-28 12:48:42
news-image

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 'சைந்தவ்'

2023-01-26 17:54:43