உலகம் நவீனத்துவமடையும் அதே வேகத்தில், நாளுக்கு நாள் பாதிப்புகளும், பாதகங்களும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றது.  முக்கியமாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி காரணமாக நன்மைகள் சிலதென்றால், தீமைகள் பலதாகவே காணப்படுகின்றது. தற்போது, உங்கள் முகப்புதத்தக மெசன்ஜர்(Messenger)ற்கு உங்களுடைய நண்பரொருவர் குறுந்தகவலொன்று அனுப்பும் விதமாக தகவல்கள் உலா வருகிறது.

அதாவது, ”என்னுடைய கைதொலைபேசியை ரீசெட் (reset)செய்ய வேண்டும். ஆதலால், என்னுடைய சுயவிபரக்கோவையை (CV) உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புகிறேன்.  இது எனக்கு மிகப்பெரிய உதவி என கருதுகிறேன். பின்னர் நாம் எமது மின்னஞ்சல் முகவரியை அனுப்புமிடத்து, அதன் பின்னர் கூகுள் கணக்கிலிருந்து (google account) ஒரு குறுஞ்செய்தி வரும். அதற்கு ஆம் (yes) என உறுதிப்படுத்துங்கள் எனவும், காரணம் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு என்னால் தகவல் அனுப்ப முடியவில்லை. எனவே அதனை உறுதிசெய்து கொள்வதற்காகவே, உங்களுடைய மேற்படி உறுதிபடுத்தல் அவசியம்” எனவும் தகவல் வரும். பின்னர் நீங்களும் அதற்கு ஆம் (yes) உறுதிபடுத்துவீர்களாயின், உங்களுடைய மின்னஞ்சல்(email), முகப்புத்தக கணக்குகள்(Facebook) அனைத்தும் வேறொருவரின் வசமாகின்றது. அதாவது, ஹேக்கிங் செய்யப்படுகிறது (Hacking).

இந்நிலையில், குறித்த நண்பருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பை ஏற்படுத்தி, உறுதி செய்து கொள்வது அவசியமென வேண்டப்படுகின்றது. மேலும், தற்செயலாக மேற்படி இன்னலுக்கு முகங்கொடுக்க நேரிட்டால், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். முகவரி இதோ ger2020@itssl.org

மேற்படி விடயத்தில் அதிக கனவமாக செயற்படுவது முக்கியமாகும்.