எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்கள் தொடர்பில் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

அதற்கமைய இன்று காலை 9 மணியளவில் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்  ஶ்ரீ ரத்னாயக்க தெரிவிததார்.

இதற்காக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் பிரதி, உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.