இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் பரவி வருகின்றன- சீன விஞ்ஞானிகள் புதிய அறிவிப்பு

04 Mar, 2020 | 10:01 PM
image

இரண்டு வகையான கொரோன வைரஸ்கள் உலகை தாக்கி வருகின்றன என சீனாவின் விஞ்ஞானிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

கொரோன வைரஸ் குறித்த தங்கள் ஆய்வின் ஆரம்பகட்ட அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் மூர்க்கமான புதிய வைரசே –  எல்வகை-  ஆய்வு செய்யப்பட்ட 70 வீதமான ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

மற்றைய வைரஸ்- எஸ் வகை  30 வீதமான  ஸ்டிரெய்ன்களிற்கு காரணம் எனவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

முதலாவது வகை வைரஸ் வுகானில் ஆரம்ப நாட்களில் காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் ஜனவரிக்கு பின்னர் இது பரவும் வேகம் குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது வகையான வைரஸ்களே தற்போது அதிகம் பரவுகின்றன இவை கொரோனாவின் பழைய வடிவத்தை கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்துள்ள சீன விஞ்ஞானிகள் எல் வகை வைரஸ்களினால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் அறிகுறிகளை கண்டுபிடிப்பது சுலபம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் ஆய்வு மரபணு வரிசையில் ஏற்படும் மாற்றங்கள்,மறுசீரமைப்பு மற்றும் இயற்கை தேர்வு காரணமாக புதிய வேறுபாடுகள் உருவாகியிருக்கலாம் என எங்கள் ஆய்வுகள் தெரிவித்துள்ளன எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மரபணு தரவு தொற்றுநோயியல் தரவு மற்றும் கொரோனா வைரஸ் நோயாளிகளின்  மருத்துவ அறிகுறிகளின் விளக்க பதிவுகள் குறித்து உடனடி முழுமையான ஆய்வுகள் அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17