ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தடகள வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க, தனது வீட்டில் வைத்து தாக்குதலுக்குள்ளானதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அவரது கணவர்  தம்மிக நந்தகுமார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுசந்திகா ஜெயசிங்க, ஒலிம்பிக் தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.