தெற்கு அதிவேக வீதியில் வாகன சாரதிகளை அச்சுறுத்தும் விதமாக முதலைகள் மற்றும் ஏனைய விலங்குகள் வீதியின் குறுக்கே சுற்றித்திரிதாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் முதலை ஒன்று வீதிக்கு குறுக்கே சென்று மறுபுறம் செல்லும் காணொளியொன்று  தற்போது வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியை பதிவுசெய்துள்ள சாரதியொருவர் தெரிவிக்கையில்,

தெற்கு அதிவேக வீதியின் ஹம்பாந்தோட்டையிலிருந்து - காலிக்குச் செல்லும் வீதியில் பல விலங்குகள் அங்கும் இங்குமாக திரிவதை அவதானிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.