சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா அரசியலிலிருந்து வெளியேற வேண்டும் - காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

Published By: Digital Desk 4

04 Mar, 2020 | 03:09 PM
image

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 1111 நாட்களை எட்டியது.

இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று மதியம் 12.30 மணியளவில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும்,வெளிநாடு தலையிட்டு எமக்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே, சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கதறி அழுது தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

உறவுகள் கருத்து தெரிவிக்கும் போது, தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

எனவும் போர்க்குற்றம் ஒரு சர்வதேச குற்றம் எனவே இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் அல்லது சர்வதேச தீர்ப்பாயத்தினால் விசாரிக்கப்பட வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் பேரவை வடகிழக்கு வரவேண்டும். வந்து எங்கள் துயரங்களை நேரில் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதன்போது அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18
news-image

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர்...

2025-11-11 16:40:39
news-image

அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

2025-11-11 14:52:49
news-image

விவசாயத்துறை அமைச்சரை பதவி விலக்குங்கள் -...

2025-11-11 14:46:20
news-image

பாராளுமன்ற உறுப்பினர் உரைகளில் பொருத்தமில்லாத வசனங்களை...

2025-11-11 17:35:23