கொரோனா வைரஸ் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் 2020 க்கான ரக்பி ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்தியுள்ளதாக ஜப்பானின் ரக்பி யூனியன்  (JRFU) இன்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் டோக்கியோவின் 2020 எழுவர் கொண்ட ரக்பி போட்டிக்கான பயிற்சிப் போட்டிகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த போட்டிகளே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

அதேவேளை விரைவில் போட்டிகளை நடாத்துவதற்கும் , பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் அனைத்து சோதனைகளை மேற்கொள்ளவும் தயாராகவுள்ளதாக தெரிவித்த சர்வதேச ஒலிம்பிக் குழு, உலக ரக்பி மற்றும் பிற அமைப்புகளுடன் கலந்தாலேசித்து மேலதிக நடடிக்கைளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.