கிளிநொச்சியில்  அரசியல் காரணங்களுக்காகவும், சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும்  தாங்கள் தாக்கப்பட்டுள்ளதாக கூறி வைத்தியசாலையில் அனுமதி

க்கப்படுகின்றவர்களால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அன்மைக் காலமாக அரசியல் கட்சிகளை சேர்ந்த நபர்கள் எதிர் தரப்பினர்களால் தாம் தாக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்து வைத்தியசாலையில்  தாங்களாக சென்று நோயாளர் விடுதிகளில் தங்குகின்றனர்.  அவர்கள் தங்களின் எதிர்தரப்பு நபர்கள் கைது செய்யப்படும் வரை  வைத்தியசாலையில் உடலின் பல இடங்களில் வலி  இருப்பதாகவும்,  மற்றும் ஏனைய காரணங்களை கூறியும் தங்கியிருக்கின்றார்கள். 

ஆனால் இவர்களை மருத்துவ ரீதியாக பரிசோதித்தால் அவர்களிடம் எவ்விதமான பிரச்சினையும் காணப்படுவதில்லை. பலமாக அடி விழுந்ததாக கூறுவார்கள் பரிசோதித்தால்  அவ்வாறு எதுவும் நடந்தமைக்கான அறிகுறிகள் தென்படுவதில்லை எனத் தெரிவிக்கும் மருத்துவர்கள்,  அன்மையில் இரண்டு மூன்று சம்பவங்கள் அவ்வாறு நடந்துள்ளது எனவும் பின்னர் அவர்கள் சாதாரனமாக விடுதியிலிருந்து வெளியேறி சென்றுவிடுகின்றனர் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்தோடு சில சமயங்களில் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரும் வைத்தியசாலைக்கு சென்று தாங்கள் தாக்கப்பட்டதாக கூறி நோயாளர் விடுதியில் சிகிசைக்காக தங்குகின்றனர். 

னால் மருத்துவ பரிசோதனைகளில் அவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் காணப்படுவதில்லை எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் ஏனைய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் நெருக்கடி ஏற்படுவதோடு, அரச வளங்களும் வீண் விரையம் செய்யப்படுகிறது என்றும் கவலை  தெரிவித்துள்ளனர்.